தருமபுரி, ஜன.05:
தமிழ்நாட்டின் நலன் மற்றும் சமூக சமத்துவத்தை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் மேற்கொண்டு வரும் வைகோ அவர்களுக்கு, பயணத்தின் நான்காவது நாளான இன்று தருமபுரி மாவட்ட மதிமுக சார்பில் மலர்மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட மதிமுக ஏற்பாடு செய்த இந்த வரவேற்பு நிகழ்வில், அக்கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், கோ. இராமதாஸ் மாவட்டச் செயலாளர், மாவட்ட பொருளாளர் கிருபானந்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வேல்முருகன், பத்மநாபன், அணி நிர்வாகிகள் ஓ.எம். வெங்கடேசன், வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் பாப்பிரெட்டிப்பட்டி சுகவனம், மொரப்பூர் ஜெகநாதன், தருமபுரி முனுசாமி, காந்தி, காரிமங்கலம் முனுசாமி, பென்னாகரம் ரத்தினவேல், நல்லம்பள்ளி சரவணன், பாலக்கோடு அசோகன் உள்ளிட்டோரும், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதி, வெங்கட்ராமன், சக்திவேல், காரிமங்கலம் சரவணன் ஆகியோரும் பங்கேற்று, தலைவர் வைகோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சமத்துவ நடைபயணத்திற்கு ஆதரவும் உற்சாகமும் அளித்தனர்.

.jpg)