Type Here to Get Search Results !

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு JCI தருமபுரி பில்லர்ஸ் சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.


தருமபுரி, ஜன. 02:

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தருமபுரி நகரில் மனிதநேயப் பணியாக JCI பில்லர்ஸ் தருமபுரி சார்பில் முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த வயதான முதியோர்களை நேரில் சந்தித்து, குளிர்காலத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் போர்வைகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் JCI தலைவர் ராம்குமார், காவல்துறை செல்வம், JCI செயலாளர் ஸ்டெபி, JCI பால்ராஜ், ஆரிப், உதவும் உறவுகள் பவுண்டேஷன் அதியமான் கோட்டை ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சமூக பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட்ட இந்நலத்திட்டம், முதியோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு முருகேசன் ஸ்பான்சராக இருந்து முழுமையான ஆதரவை வழங்கினார். புத்தாண்டை மனிதநேயத்துடன் தொடங்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு, சமூகத்தில் நல்வாழ்வும் கருணையும் வளர்க்கும் முயற்சியாக அமைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies