தருமபுரி – ஜனவரி 02:
தருமபுரி ஆதி பவுண்டேஷன் சார்பில் 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை பசுமை புத்தாண்டு தினமாக கொண்டாடும் வகையில், இண்டூர் ஏரியில் 700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. புத்தாண்டு தினத்தில் மரக்கன்றுகளை நட்டு பசுமையான தருமபுரியை உருவாக்குவதே அமைப்பின் நோக்கம் என ஆதி பவுண்டேஷன் நிறுவனர் ஆதிமூலம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூத்தப்பாடி மா. பழனி தலைமையாசிரியர், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம், சேவா பாரதி மாநிலத் தலைவர் எல். விவேகானந்தன், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் ஆதி பவுண்டேஷன் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிகழ்ச்சியில் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் நாவல், அத்தி, வேப்பம் உள்ளிட்ட பல்வேறு வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் ஆதி பவுண்டேஷன் சார்பில் மு. பிரேம்குமார் நன்றி தெரிவித்தார்.

.jpg)