தருமபுரி, ஜன.10:
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13.01.2026 (செவ்வாய் கிழமை) அன்று நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் அன்று மாலை 04.30 மணியளவில், புதிய தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகிக்க உள்ளார்.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள், தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை விரிவாகக் குறிப்பிட்டு, இரட்டை பிரதிகளில் மனுக்களாக தயார் செய்து இக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்வு பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

