தருமபுரி, ஜன. 24:
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) செயற்குழு கூட்டம், இன்று (24.01.2026) காலை 11.00 மணியளவில் தருமபுரி மாவட்ட கழக அலுவலகம், தளபதி அரங்கத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் தருமபுரி கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் C. செல்வராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி, எம்.பி., சிறப்புரை ஆற்றினார். நிகழ்விற்கு தருமபுரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் M.P. கௌதம் அனைவரையும் வரவேற்றார்.
மேலும், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பெ. சுப்ரமணி, PNP. இன்பசேகரன், தொகுதி பார்வையாளர் T. செங்குட்டுவன், பென்னாகரம் பார்வையாளர் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், முன்னோடிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். கூட்டத்தின் முடிவில் தருமபுரி கிழக்கு நகர செயலாளர் நாட்டான் M. மாது நன்றியுரை ஆற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
தீர்மானம் – 1 : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” வீடு வீடாக மகளிர் பரப்புரை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம், தோழி விடுதிகள், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட திராவிட மாடல் அரசின் மகளிர் நலத் திட்டங்களை பெண்களிடம் கொண்டு சேர்த்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் முழுமையான மகளிர் ஆதரவை திமுகவிற்கு உறுதி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
பிப்ரவரி 1 முதல் மார்ச் 8 வரை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் – 2 : “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை.
பிப்ரவரி 1 முதல் 28 வரை தமிழ்நாடு முழுவதும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் மூலம் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு தொகுதியிலும் தெருமுனை மற்றும் அரங்கக் கூட்டங்கள் நடத்தி, முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழில் முனைவோரை சந்தித்து கலந்துரையாடல்கள் நடத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 3 : “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சி மாநாடு.
BLA-2, BLC, BDA உள்ளிட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களை முழுமையாக தேர்தல் பணிக்கு தயார் செய்யும் வகையில், பிப்ரவரி 14-ம் தேதி திருப்பத்தூரில் நடைபெறும் வடக்கு மண்டல பயிற்சி மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 4 : “ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்” மாநில மாநாடு.
மார்ச் 8-ம் தேதி திருச்சி தீரர்கள் கோட்டத்தில் நடைபெறும், 10 லட்சம் கழக உடன்பிறப்புகள் பங்கேற்கும் மாபெரும் மாநில மாநாட்டில் தருமபுரி கிழக்கு மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக கலந்து கொண்டு கழக வெற்றியை பறைசாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
.gif)

.jpg)