தருமபுரி, ஜன.13:
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், மேலும் FL-2, FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக் கூடங்கள் ஆகியவை,
-
15.01.2026 இரவு 10.00 மணி முதல் 17.01.2026 காலை 12.00 மணி வரை,
-
25.01.2026 இரவு 10.00 மணி முதல் 27.01.2026 காலை 12.00 மணி வரை,
எந்தவித மதுபான விற்பனையும் இன்றி முழுமையாக மூடி வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.
மேற்கண்ட உத்தரவை மீறி எவரேனும் மதுபான விற்பனையில் ஈடுபட்டாலோ, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.

.jpg)