தருமபுரி, ஜன.12:
தருமபுரி மாவட்டத்தில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பாண்டிற்கான இலவச பஸ்பாஸ் வழங்குவதற்காக இணையவழி பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று முதல் 31.01.2026 வரை (அரசு விடுமுறை தினங்கள் தவிர) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறுகிறது. தமிழக அரசு ஆணைப்படி, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயமாக இணையவழி பதிவு செய்ய வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
-
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை
-
தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை
-
ஆதார் அட்டை
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
-
கல்வி பயிலும் சான்று அல்லது
-
பணிபுரியும் சான்று அல்லது
-
தொடர் மருத்துவ சிகிச்சை சான்றுஎன ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முகாமில் கலந்து கொண்டு, இணையவழி பஸ்பாஸ் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

.jpg)