தருமபுரி, ஜன.12:
2025–26 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பணிகள் 21.12.2025 அன்று தொடங்கப்பட்டு, தற்போது நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியருமான வீ. இரவி அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலையின் விவகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு நடவு செய்துள்ள நிலையில், சில காரணங்களால் இதுவரை சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யாமல் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது அரவை பணிகள் நடைப்பெற்று வரும் சூழலில், கரும்பு நடவு செய்து இன்னும் பதிவு செய்யாத அனைத்து கரும்பு விவசாய அங்கத்தினர்களும் உடனடியாக ஆலைக்கு பதிவு செய்து, தங்களது கரும்புகளை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி உரிய பயனை பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம் விவசாயிகள் தங்கள் உழைப்பிற்கு உரிய வருவாயைப் பெற்று, அரவை பருவத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

.jpg)