தருமபுரி – ஜனவரி 20:
தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் தலைமை தாங்கினார். தருமபுரி நகரச் செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, கோபால், வேலுமணி, விஸ்வநாதன், மதிவாணன், செந்தில், தனபால் செல்வம் உள்ளிட்டோர் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தலைமை பேச்சாளர்கள் சௌந்தரராஜன், சின்னதம்பி, விஜயகுமார், மாநில விவசாயப் பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, எம்ஜிஆரின் ஆட்சிக்கால சாதனைகள், சமூகநலத் திட்டங்கள் மற்றும் அதிமுகவின் கொள்கைகள் குறித்து விரிவாக பேசினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் அசோகன் உள்ளிட்ட மாவட்ட, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கூட்டத்தின் முடிவில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

.jpg)