தருமபுரி, ஜன. 22:
முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம்–2026” என்ற தலைப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2026 மாதங்களில் நடைபெற உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும், 01.01.1991 முதல் 31.12.2009-க்குள் பிறந்த 16 முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 25.01.2026 மற்றும் 27.01.2026 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
போட்டிகள் நடைபெறும் இடங்கள் வருமாறு:
-
தருமபுரி ஊராட்சி ஒன்றியம் – அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி
-
நல்லம்பள்ளி – அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி
-
பென்னாகரம் – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி
-
ஏரியூர் – அரசு மேல்நிலைப்பள்ளி, பெரும்பாலை
-
பாலக்கோடு – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு
-
காரிமங்கலம் – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம்
-
மொரப்பூர் – அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி
-
கடத்தூர் – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கடத்தூர்
-
அரூர் – சிறு விளையாட்டரங்கம், அரூர்
-
பாப்பிரெட்டிப்பட்டி – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி
மாவட்ட அளவிலான அனைத்து போட்டிகளும் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் நடைபெறும்.
ஊராட்சி ஒன்றிய அளவில்,
-
25.01.2026 அன்று: ஆண்கள், பெண்களுக்கான 100 மீ ஓட்டம், குண்டு எறிதல், ஆண்களுக்கான ஸ்டிரீட் கிரிக்கெட், ஆண்–பெண் இருபாலருக்கான கேரம் மற்றும் வாலிபால் போட்டிகள்
-
27.01.2026 அன்று: ஆண்–பெண் இருபாலருக்கான கயிறு இழுத்தல், கபாடி மற்றும் பெண்களுக்கான எறிபந்து போட்டிகள் நடைபெறும்.
போட்டிகள் காலை 9.00 மணிக்கு தொடங்கும். காலதாமதமாக வரும் தனிநபர்கள் மற்றும் அணிகள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். ஊராட்சி ஒன்றிய அளவில் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தடகளப் போட்டிகளில் ஒருவர் அதிகபட்சமாக 2 ஈவெண்ட்களிலும், 2 விளையாட்டுப் போட்டிகளிலும் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
பரிசுத் தொகையாக,
-
ஊராட்சி ஒன்றிய அளவில்: முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000
-
மாவட்ட அளவில்: முதல் பரிசு ரூ.6,000, இரண்டாம் பரிசு ரூ.4,000, மூன்றாம் பரிசு ரூ.2,000
-
மாநில அளவில்: முதல் பரிசு ரூ.75,000, இரண்டாம் பரிசு ரூ.50,000, மூன்றாம் பரிசு ரூ.25,000 வழங்கப்படும்.
ஊராட்சி ஒன்றிய மற்றும் நேரடி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் 23.01.2026 வரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

.jpg)