Type Here to Get Search Results !

தருமபுரியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி – ஜனவரி 11:


தருமபுரி நகரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய ஊழியர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மின்னல் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் ப.கீ. பட்டாபிராமன் தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் எம். சுந்தர்ராஜன் கலந்து கொண்டு, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக உரையாற்றினார். மக்களின் அடிப்படை பிரச்சினைகள், தொழிலாளர் நலன், விவசாயிகள் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்களில் கட்சி மேற்கொள்ள வேண்டிய போராட்டங்கள் மற்றும் அரசியல் அணுகுமுறைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.


இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கணேசன் (மதுரை), கோபால் (தேனி), காளியப்பன் (தென்காசி), சுப்பிரமணி (தஞ்சாவூர்), சுப்பிரமணியம் (கடலூர்), சங்கர் (திருப்பத்தூர்), குணசேகரன் (ஈரோடு), ஜெயன் (திருப்பூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தருமபுரி மாவட்ட துணை செயலாளர்கள் ஜி. மாதையன், சி. பாலன், பொருளாளர் அலமேலு எத்துராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி. இரவி, ஜி. பச்சாகவுண்டர், என்.பி. ராஜி, ஜி. ராஜகோபால், எல்.சி. கிருஷ்ணன், விவசாயிகள் சங்க தலைவர் மாதன், காளியம்மாள், பாப்பம்மாள் மற்றும் மாநிலத்திலிருந்து வந்த முக்கிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தின் இறுதியில், வரவிருக்கும் தேர்தல் பணிகள், மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மற்றும் அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies