தருமபுரி – ஜனவரி 13:
தருமபுரி மாவட்ட மற்றும் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் மோடி பொங்கல் விழா வள்ளலார் திடலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் வகையில் பொங்கல் படையிட்டு வழிபாடு நடத்தப்பட்டதுடன், பாரம்பரிய விளையாட்டுகளான உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகர பாஜக தலைவர் சாய் ஆறுமுகம், ஓபிசி மாவட்ட தலைவர் சசிகுமார், விளையாட்டு பிரிவு பொறுப்பாளர் அருண்குமார், மாநில இளைஞரணி நிர்வாகி சாய் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி ஹனிபா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சங்கீதா மற்றும் சாமிக்கண்ணு, மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு, பொங்கல் பண்டிகையை மோடி பொங்கலாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

.jpg)