தருமபுரி – ஜனவரி 13:
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா, பள்ளி தலைமையாசிரியர் சுதா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் பெற்றோர்–ஆசிரியர் கழக தலைவர் சந்திரமோகன், பொருளாளர் நாட்டான் மாது மற்றும் டைரக்டர் டி.ஏ.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருநாளை போற்றும் வகையில் பொங்கல் படையலிட்டு, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மாசில்லா போகித் திருநாளை கொண்டாட வேண்டும் என்ற உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை தலைமையாசிரியர் முருகன், இருபாலர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் மாணவிகள் கலந்து கொண்டு, சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

.jpg)