தருமபுரி, ஜன. 30:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பெல்லுஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், “உயர் கல்வியே எங்கள் இலக்கு” என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் வாசுதேவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர்–ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சரவணன் நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 45 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி தொடர்பான விளக்கங்களை கவனமாக கேட்டறிந்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் தலைமை ஆசிரியர் சிவமூர்த்தி, மாணவர்கள் உயர்கல்வியை இலக்காக கொண்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களுக்காக உயர்கல்வி தொடர்பான வினாடி–வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் முனிலட்சுமி, ரகுராமன், முன்னாள் மாணவர்கள் ஜான் பென்னிகுவிக், நந்தினி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக முதுகலை ஆசிரியை விமலா நன்றியுரை ஆற்றினார்.
.gif)

.jpg)
.jpg)