Type Here to Get Search Results !

மை பாரத் கேந்திரா சார்பில் சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியில் தேசிய வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


தருமபுரி, ஜனவரி 28:


மை பாரத் கேந்திரா சார்பில் தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் அமைந்துள்ள சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியில் தேசிய வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சி இன்று (28.01.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று உறுதிமொழியை வாசித்தார்.


இந்தியக் குடிமக்களாகிய நாம், மக்களாட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, நாட்டின் மக்களாட்சி மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆளாகாமல், அச்சமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் வாசித்த உறுதிமொழியை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்டு, ஜனநாயக கடமையான வாக்களிப்பின் அவசியத்தை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, வாக்காளரின் உரிமை மற்றும் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்துப் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகளை வழங்கினார். மேலும், வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக மாணவி வரைந்த ஓவியத்தை அவர் பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, காரிமங்கலம் வட்டாட்சியர் மனோகரன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies