தருமபுரி, ஜன.28:
வடலூர் இராமலிங்கர் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் மதுபான விற்பனைக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 01.02.2026 அன்று இராமலிங்கர் நினைவு தினம் நடைபெறுவதையடுத்து, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கீழ் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், மேலும் FL-2, FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படை வீரர் மதுவிற்பனை கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட உள்ளன.
இதன்படி, 31.01.2026 இரவு 10.00 மணி முதல் 03.02.2026 காலை 12.00 மணி வரை எந்தவிதமான மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி எவரேனும் மதுபான விற்பனையில் ஈடுபட்டாலோ, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, சமூக ஒழுங்கு மற்றும் அமைதியை பேண வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
.gif)

.jpg)