பென்னாகரம், டிச. 13:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் பாமக இளைஞரணி செயலாளர் ஜி.கே. தமிழ் குமரன் தலைமையில் நடைபெற்றது. இதில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அனைத்து சாதியினருக்கும் உரிய விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசியவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் சமூக நீதி பாதிக்கப்படுவதாகவும், இடஒதுக்கீட்டு உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், பாமக மாவட்ட செயலாளர் சரவணன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)