தருமபுரி – டிசம்பர் 07:
தருமபுரி நகர மன்ற நியமனக் கவுன்சிலர் உறுப்பினராக 1வது வார்டைச் சேர்ந்த எம்.கே. பெருமாள் பொறுப்பேற்றதை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெற்றது. அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அ.மணி எம்.பி தலைமையேற்றார். தருமபுரி நகர மன்ற பொறுப்பாளர்கள் நாட்டான் மாது, கௌதம் ஆகியோர் வரவேற்பு வழங்கினர்.
விழாவில் வார்டு பிரதிநிதி சரோஜாமதி, நகர துணை அமைப்பாளர் பிரவீன், தங்கராஜ், சூர்யா, நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், முல்லைவேந்தன், சுருளிராஜன், ஜெகன், சம்மந்தம், வெல்டிங் ராஜா, கவிதா யுவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, ரவி, குமார், கனகராஜ், காளி, டிபிஜே வனிதா பிரபு (மாவட்ட மகளிரணி சமூக வலைத்தள பொறுப்பாளர்), முத்தியம்மாள் (நகர மகளிரணி அமைப்பாளர்), சபரி பாண்டியன் (நகர இளைஞரணி அமைப்பாளர்), வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)