பாப்பாரப்பட்டி, டிச. 07 :
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கடைவீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்ததால், அப்பகுதி மக்கள் மாற்றுப்பாதை அமைத்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ₹33 கோடி மதிப்பீட்டில் 4.44 கிமீ நீளமுடைய புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கான பூமி பூஜையை தருமபுரி தொகுதி எம்.பி. ஆ.மணி இன்று நடாத்தி, அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார்.
தற்போது பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் கடைவீதியை கடந்து செல்லும் பிரதான சாலை, புறவழிச்சாலை பணிக்காக தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய புறவழிச்சாலை பாலக்கோடு – அ.பாப்பாரப்பட்டி – சிட்லக்காரன்பட்டி வழியாக சுமார் 4 கி.மீ சுற்றி பென்னாகரம் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் உமாசங்கர், தருமபுரி மேற்கு நகர பொறுப்பாளர் கௌதம், ஒன்றிய செயலாளர்கள் வீரமணி, பச்சையப்பன், நகர பொறுப்பாளர் பிரகாஷ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், முன்னாள் பேரூராட்சி தலைவர் திருவேங்கடம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், பிரபு, நிர்வாகிகள் பொண்ணுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)