தருமபுரி, டிச.12:
தருமபுரி மாவட்ட ஆாட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் “உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் மீட்பு முகாம்” இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூறியதாவது: இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் 01.10.2025 முதல் 31.12.2025 வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 214 பயனாளிகள் கண்டறியப்பட்டு மொத்தம் ரூ.37.40 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத அல்லது உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள் மற்றும் வைப்பு தொகைகள் RBI-யின் Depositor Education and Awareness (DEA) நிதிக்கு மாற்றப்படுகின்றன. பொதுமக்கள் தங்களது உரிமை கோரப்படாத தொகைகளை,
சரிபார்த்து அறிந்து கொள்ள முடியும். உரிய ஆவணங்கள் இருந்தால், கணக்கு வைத்த நபர் அல்லது அவரது சட்ட வாரிசுகள் எந்த நேரத்திலும் அந்தத் தொகையைப் பெறலாம் என்றும் ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இன்றைய முகாமில் மட்டும் 10 பயனாளிகளுக்கு ரூ.8.00 இலட்சம் நிதி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் திரு S. தர்மராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு S. ராமஜெயம், மற்றும் அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)