பாலக்கோடு, டிச. 12 :
தருமபுரி – பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் புனிதா அவர்கள் 9ம் தேதி மாலை பள்ளியை பூட்டி சென்றார். மறுநாள் காலை பள்ளிக்கு வந்த அவர், கணினி ஆய்வகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கவனித்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கணினி செயல்பாட்டிற்கு இணைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள 16 பேட்டரிகள் மற்றும் வயர்கள் திருடப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது.
உடனடியாக அவர் பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, திருட்டு செய்த நபர் பாப்பாரப்பட்டி அடுத்த புதுக்கரம்பு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (24) என கண்டறியப்பட்டது. செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணிபுரியும் அவர், இரவு நேரத்தில் பள்ளியில் புகுந்து பொருட்களை திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)