பாலக்கோடு, டிச. 07 :
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தக்காளி மண்டி அருகே, தனியார் மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என கோரி தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் சனிக்கிழமை 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் பின்னர் தனியார் மதுபானக் கடை நோக்கி திரண்டுசென்றனர். இதனைத் தடுக்க பாலக்கோடு காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட பதட்டத்தில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஒருதொண்டர் ஆத்திரம் அடைந்து, போலீசாரின் கையை கடித்தார்.
இந்த காட்சி அங்கு இருந்தோரின் செல்பேசிகளில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)