தருமபுரி – டிசம்பர் 10 :
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (12.12.2025) காலை 10.00 மணி முதல் “நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம்” மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த முகாம் இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்திலுள்ள அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதித் துறைகளின் கிளைகளில் 01.10.2025 முதல் 31.12.2025 வரை தொடர்ச்சியாக நடத்தப்படும்.
முகாமின் நோக்கம்
நீண்டகாலமாக உரிமை கோரப்படாத
-
வங்கி கணக்குகள்
-
நிலுவை வைப்பு தொகைகள்
-
காப்பீட்டு தொகைகள்
-
பங்கு மற்றும் பிற நிதி சொத்துக்கள்
இவற்றை உரிய உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகள் மீட்க உதவுவதும், பொதுமக்களுக்கு இதுகுறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இம்முகாமின் முக்கிய நோக்கமாகும்.
DEA நிதிக்கு மாற்றப்படும் கணக்குகள்
பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாத வங்கி கணக்குகள் மற்றும் கோரப்படாத வைப்பு தொகைகள் RBI Depositor Education and Awareness (DEA) Fund-க்கு மாற்றப்படும். பொதுமக்கள் தங்களது உரிமை கோரப்படாத தொகைகளைத் தெரிந்துகொள்ள
-
சம்பந்தப்பட்ட வங்கிகளின் இணையதளம் அல்லது
-
RBI-யின் UDGAM இணையதளம் (https://udgam.rbi.org.in)மூலம் விவரங்களை சரிபார்க்கலாம்.
உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் எந்த நேரத்திலும் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகள் இத்தொகைகளை மீட்கலாம்.
முகாமில் பங்கேற்க வேண்டியவர்கள்
இந்த முகாமில் வங்கித் துறை, காப்பீட்டு துறை, நிதி துறை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்களது
-
அடையாள ஆவணங்கள்
-
தொடர்புடைய சான்றுகள்மற்றும் தேவையான பதிவு நகல்களுடன் முகாமில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)