தருமபுரி – டிசம்பர் 10
தருமபுரி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தவிர்த்து எந்தக் கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என வலியுறுத்தினார்.
வைத்தியலிங்கம் த.வெ.க-வில் சேருவதாக வெளியான தகவல் குறித்து அவர், “அவர் நிதானமாக முடிவு எடுக்கும் தலைவர்; உறுதியாக செல்ல மாட்டார்” என்று கூறினார்.
நீதிபதி தீர்ப்பை எதிர்த்து திமுக அரசு விளக்கமளித்தது குறித்து அவர்,
“சாதாரணமாக அரசு மேல்முறையீடு செய்யும். ஆனால் ‘ஸ்பீச்மேன்ட்’ வழியாக எடுத்துச் செல்லுவது வித்தியாசமான நடவடிக்கை. ஏதோ காரணத்திற்காக இதை கொண்டுவந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு பெரும்பான்மை கூட இல்லை” என விமர்சித்தார்.
கூட்டணி பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த அவர், “எந்த கூட்டணியில் சேருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பல கூட்டணி தலைவர்கள் எங்களை அணுகி வருகின்றனர். இறுதி முடிவு எடுத்த பின் அறிவிப்போம்” என்றார்.
தா.வெ.க தலைவர் விஜயின் பயணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த தினகரன், “அதை மக்கள் தீர்மானிக்கவேண்டும். நான் ஏஜென்சி நடத்தி யார் வெல்வார் என்று கூற முடியாது” என தெரிவித்தார். அவர் மேலும், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இல்லாமல் எந்த ஒரு கூட்டணியும் ஆட்சியை உருவாக்க முடியாது; வெற்றி பெறவும் முடியாது” என உறுதியாக கூறினார்.
இக்கூட்டத்தில் அக்கட்சியின் ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர்.ஆர். முருகன், மாநில சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் ஆர். பாலு, ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், குமார், கணேசன், டி.கே.ஆர். ரமேஷ், நகரச் செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருநிலையில் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662