மதநல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் தமிழக அரசின் 2026ஆம் ஆண்டிற்கான “கபீர் புரஸ்கார் விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. விருது தொகைகள் முறையே
-
ரூ.20,000
-
ரூ.10,000
-
ரூ.5,000என தகுதியுடையோருக்கு வழங்கப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், ஆயுதப்படை வீரர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக,
-
சமுதாய நல்லிணக்கம் மற்றும் மதநல்லிணக்கத்திற்காக செயல்படும் தனிநபர்கள்,
-
அரசுப் பணியின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோர்,விருதுக்குத் தகுதியுடையவராக கருதப்படுவர்.
மேலும், சாதி–இனம்–வகுப்பு வன்முறைகளின் போது பிற சமூகத்தவரின் உயிரையும் சொத்துகளையும் காப்பாற்றிய தைரியசாலிகள் இவ்விருதிற்குத் தகுதி பெறுவர்.
விண்ணப்பிக்கும் நடைமுறை
காலவரையறைக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)