தருமபுரி – டிசம்பர் 11
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (OBC), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC/DNC), சிறுபான்மையினர் (Minorities) பிரிவைச் சேர்ந்த மாணவ–மாணவியருக்கு PM YASASVI Postmatric Scholarship கல்வி உதவித்தொகை திட்டம் ஆண்டுதோறும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தகுதி நிபந்தனைகள்
-
OBC / MBC / DNC / Minority மாணவ–மாணவியர்கள்
-
எந்த நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
2. தொழிற்படிப்பு, முதுகலை, பாலிடெக்னிக் மற்றும் பிற படிப்புகள்
-
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- ஐ மீறக்கூடாது
விண்ணப்பிக்கும் முறை
2025–26 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பம் UMIS (University Management Information System) எண் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள Institution Nodal Officer-ஐ அணுகி, https://umis.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2025
கல்வி உதவித்தொகை தொடர்பான மேலதிக சந்தேகங்களுக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)