Type Here to Get Search Results !

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மற்றும் EVM முதல் நிலைச் சரிபார்ப்பு – தருமபுரியில் அரசியல் கட்சிகளுடன் ஆய்வுக்கூட்டம்.


தருமபுரி – டிசம்பர் 11

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 பணிகளைப் பற்றிய ஆய்வுக்கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


அதே நேரத்தில், வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026–ஐ முன்னிட்டு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவன பொறியாளர்களால் மேற்கொள்ளப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) முதல் நிலைச் சரிபார்ப்பு தொடர்பாகவும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து ஆட்சித் தலைவர் விளக்கம்

கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

  • இந்திய தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி 11.12.2025க்குள் அனைத்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களும் பதிவாக வேண்டும்.

  • தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 12,85,432 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் 100% பதிவும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

  • இறப்பு, நிரந்தர குடிபெயர்வு, இரட்டை பதிவு மற்றும் காணப்படாதவர்கள் குறித்து தற்காலிக பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனடியாக வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

  • தகுதியுள்ளோர் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் பெற வேண்டும்; தகுதியற்றோர் இடம்பெறக்கூடாது” என அனைத்து நிலை அலுவலர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டது.


EVM முதல் நிலைச் சரிபார்ப்பு தொடர்பான அறிவிப்பு

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு BEL நிறுவன பொறியாளர்கள் மேற்கொள்ளும் முதல் நிலைச் சரிபார்ப்பு பணிகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டன.

  • இப்பணிகளுக்கான தேர்தல் ஆணைய பார்வையாளராக டெல்லி மாநில கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் திரு. பல்ராம் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • அவர் 13.12.2025 அன்று தருமபுரிக்கு வருகை தந்து செயல்பாடுகளை ஆய்வு செய்வார்.

  • சரிபார்ப்பு நடைபெறும் அறையில் மின்னணு சாதனங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டு, காவல் துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • செயல்படும் EVMகள் மட்டுமே தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்; செயலிழந்த இயந்திரங்கள் BEL நிறுவனத்திடம் திரும்ப அனுப்பப்படும்.


சரிபார்ப்பு பணிகள் தொடக்கம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள EVM வைப்பறையில், 11.12.2025 முதல் முதல் நிலைச் சரிபார்ப்பு பணிகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன.


நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி கவிதா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. பண்டரிநாதன், தேர்தல் வட்டாட்சியர் திரு. அன்பு உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் தேசிய–மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies