தருமபுரி – டிசம்பர் 10
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் இன்று (10.12.2025) “மனித உரிமைகள் தின விழிப்புணர்வு பேரணி” தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி C. திருமகள், M.L., அவர்கள் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. S. மகேஸ்வரன், B.Com., B.L., அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட நீதிபதி திருமதி U. மோனிகா, M.L., மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு மாவட்ட நீதிபதி A. S. ராஜா, B.Sc., B.L., விரைவு மகளிர் மாவட்ட நீதிபதி செல்வி S. அசின்பானு, B.L., தலைமை குற்றவியல் நீதிபதி திரு முகம்மது ரிஸ்வானுல்லா ஷெரிப், முதன்மை சார்பு நீதிபதி திரு ஞானபாலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி G. கலைவாணி, மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு சார்பு நீதிபதி திருமதி S. விபிசி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலாளர் திருமதி P. K. தமயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஸ்ரீகிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் திரு கிருஷ்ணா மற்றும் மாணவ–மாணவிகள், இலக்கியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நீதிமன்ற பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு விழிப்புணர்வை மேம்படுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)