பாப்பிரெட்டிப்பட்டி, டிசம்பர் 10
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், வரும் டிசம்பர் 14 அன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் P. பழனியப்பன் அவர்களின் இல்லத் திருமண விழா ஏற்பாடுகளை, வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
திருமண விழாவிற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு, வருகை தரும் முக்கிய பிரமுகர்கள் தொடர்பான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நிகழ்வில் கலந்து கொண்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் – ரெ. சதீஷ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – மகேஷ்வரன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் – செம்மலை, திமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வம், விழா மிகச் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)