தருமபுரி – டிசம்பர் 09:
தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி சார்பில் சேலம் பெருங்கோட்டம் உட்பட்ட ஒன்பது மாவட்டங்களின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில மகளிரணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மகளிர் முன்னேற்றம், அரசியல் பங்கேற்பு, மத்திய அரசின் திட்டங்களை மகளிருக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து அவர் விரிவாக வழிகாட்டினார்.
கூட்டத்தில் தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் சரவணன், தருமபுரி மாவட்ட மகளிர் அணி தலைவர் கலையரசி, நகரத் தலைவர் ஆறுமுகம், இளைஞரணி பொதுச் செயலாளர் அனிபா முகமது, விளையாட்டு துறை அணி தலைவர் அருண்குமார், இணை அமைப்பாளர் கவியரசு, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சுரேஷ், ஓபிசி மாவட்ட தலைவர் சசிகுமார் அத்துடன், பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சி பெண்கள் அரசியல் வலுசேர்க்கை, அமைப்பு வலுப்படுத்தல், தேர்தல் முன்னேற்பாடுகள் போன்ற முக்கிய தீர்மானங்களுடன் நிறைவுற்றது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)