Type Here to Get Search Results !

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை இயக்கம் 4.0 – மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.


தருமபுரி – டிசம்பர் 10:

தருமபுரி மாவட்டம் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் தூய்மை இயக்கம் 4.0 இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுப்புற சுத்தம், கழிவு மேலாண்மை, பொது சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாக அவர் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.


தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஆட்சித்தலைவர் வாசித்த உறுதிமொழியை, நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மீள வாசித்து ஏற்றுக்கொண்டனர்.


உறுதிமொழியின் முக்கிய அம்சங்கள்:

  • சுத்தமே சுகாதாரம் என்பதை வாழ்க்கை முறையாக கடைப்பிடித்தல்

  • அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தல்

  • கழிப்பறை மற்றும் உணவு இடங்களை முறையாகப் பயன்படுத்தி பராமரிக்க உதவுதல்

  • காகித பயன்பாட்டை குறைக்கும் முயற்சிகள்

  • உணவுக் கழிவுகளை தனியாக சேகரித்து சரியான முறையில் அப்புறப்படுத்துதல்

  • தூய்மையை பேணுதல் என்பது அலுவலகப் பொறுப்பு என்பதை உணருதல்

  • தூய்மை குறித்த விழிப்புணர்வை பரப்ப அரசு முயற்சிகளில் பங்கேற்பது


நிகழ்ச்சியில் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகர், மருத்துவமனை துணை முதல்வர் சாந்தி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் நாகேந்திரன், குழந்தை நல மருத்துவர்கள் ரமேஷ் பாபு, காந்தி, நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, அத்துடன், பல்வேறு துறை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies