தருமபுரி – டிசம்பர் 10:
தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா காலேஜ் ஆஃப் பார்மஸி சார்பில் நடத்தப்பட்ட 64-வது தேசிய மருந்தியல் வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்வில், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், ஸ்ரீ விஜய் வித்யாலயா பார்மஸி கல்லூரி தாளாளர் டி.என்.சி. மணிவண்ணன், கல்லூரி முதல்வர் செந்தில் குமார், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மருந்தாளுநர்கள் சமூக ஆரோக்கியத்தை காக்கும் முக்கிய தூண்கள் என்பதை வலியுறுத்தும் வகையில், பேரணியின் முழுவதும் தடுப்பூசி பாதுகாப்பு செய்திகளும், மருந்தியல் கல்வியின் மகத்துவமும் பரப்பப்பட்டன.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)