தருமபுரி – டிசம்பர் 09
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவித்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர்நிலை மருத்துவ முகாம் திட்டம், தருமபுரி மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 2025 முதல் டிசம்பர் 2025 வரை நடத்தப்பட்ட முகாம்களில் இதுவரை மொத்தம் 21,615 பொதுமக்கள் பல்வேறு மருத்துவ சேவைகளின் பயனடைந்துள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் 02.08.2025 அன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதத்திற்கு 3 உயர்நிலை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, டிசம்பர் இறுதிக்குள் மொத்தம் 30 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள்
முகாம்களில் பின்வரும் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன:
-
பொது மருத்துவம்
-
பொது அறுவை சிகிச்சை
-
எலும்பு & மூட்டு மருத்துவம்
-
கர்ப்பகால & பிரசவ மருத்துவம்
-
குழந்தை நல மருத்துவம்
-
இதய நல மருத்துவம்
-
நரம்பியல்
-
நுரையீரல்
-
நீரிழிவு மருத்துவம்
-
தோல் மருத்துவம்
-
பல் மருத்துவம்
-
கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம்
-
மனநலம்
-
இயற்கை மருத்துவம்
-
சித்த, ஆயுர்வேதம்
-
உளவியல் ஆலோசனை
முன்னுரிமை பெறுபவர்கள்
-
கர்ப்பிணிப் பெண்கள்
-
பாலூட்டும் தாய்மார்
-
வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள்
-
உயர்ந்த இரத்த அழுத்தம் & நீரிழிவு நோயாளிகள்
-
இதய நோயாளிகள்
-
படுக்கையிலிருந்து எழ முடியாத நோயாளிகள்
-
மாற்றுத்திறனாளிகள்
முகாம்களில் வழங்கப்படும் மற்ற சேவைகள்
-
அனைத்து வருகையாளர்களுக்கும் ஆபா கார்டு (ABHA CARD) உருவாக்கம்
-
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (CMCHIS) பதிவு
-
மேல் பரிசோதனை & சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள்
-
மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குதல்
-
கண்புரை நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை ஏற்பாடுகள் (தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை)
தருமபுரி மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மருத்துவ நலன்களைப் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)