தருமபுரி – டிசம்பர் 09
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டிகள் 01.12.2025 மற்றும் 02.12.2025 அன்று சேலம் ஏ.வி.எஸ் கல்லூரியில் நடைபெற்றன. இதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வாலிபால் அணியும் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பல்கலைக்கழக விளையாட்டுத் தேர்வு குழுவின் பரிந்துரையின் பேரில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஐ. ஹரிதரன், தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டியில் பங்கேற்க சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் 10.12.2025 முதல் 14.12.2025 வரை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டியில் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)