தருமபுரி– டிசம்பர் 09 :
திருப்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த 65 வயதான சுந்தரபாண்டி என்ற முதியவர், உறவினர்கள் இன்றிச் செல்வதற்கும் உதவியின்றியும் ஏழ்மையில் வாழ்ந்து வந்தார். உடல்நிலை மோசமான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக அவர் உயிரிழந்தார்.
உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால், அவரது உடலை நல்லடக்கம் செய்ய மை தருமபுரி அமைப்பு முன்வந்தது. திருப்பத்தூர் காவல் நிலைய காவலர் சிவச்சந்திரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தன்னார்வலர்கள் கார்த்திக், கணேஷ் குமார், பார்வதி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி புனித உடலை முறையாக நல்லடக்கம் செய்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

