தருமபுரி – டிசம்பர் 08
தருமபுரி அருகே பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பாக “நானோ கட்டமைக்கப்பட்ட பாரம்பரிய ஆயுர்வேத மருந்து மற்றும் நிற மாலையின் மூலம் அதன் சரிபார்ப்பு” என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்பு சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி முனைவர் பிரசாத் அவர்களின் வரவேற்பு உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, இயற்பியல் துறை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் செல்வ பாண்டியன் தலைமை உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த இயற்பியல் துறையின் முனைவர் சந்தோஷ் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு கருத்துரையை வழங்கினார். நானோ தொழில்நுட்பம், பாரம்பரிய மருத்துவம், நிற மாலை ஆய்வு ஆகிய துறைகளின் தொடர்பு மற்றும் அதன் அறிவியல் முக்கியத்துவம் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.
முனைவர் கோபாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். நிகழ்வை இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் முனைவர் செந்தில் உடனிருந்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)