தருமபுரி – டிசம்பர் 08, 2025
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 524 கோரிக்கை மனுக்கள் ஆட்சித்தலைவரால் பெற்றுக்கொள்ளப்பட்டன.
பொதுமக்கள் அளித்த முக்கிய கோரிக்கைகள்
கூட்டத்தில் பொதுமக்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்:
-
சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
-
பட்டா வழங்குதல்
-
சிட்டா பெயர் மாற்றம்
-
புதிய குடும்ப அட்டை பெறுதல்
-
வாரிசு சான்றிதழ்
-
வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள்
-
இலவச வீட்டுமனை பட்டா
-
முதியோர் ஓய்வூதியம் மற்றும் பிற நலத்திட்ட உதவித் தொகைகள்
-
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் தேவையான உபகரணங்கள்
மொத்தம் 524 மனுக்கள் பெற்று, அவை தொடர்புடைய துறை அலுவலர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
“பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு அரசின் விதிமுறைகளின் படி விரைந்து நடவடிக்கை எடுத்து, தகுதியானவர்களுக்கு உடனடி தீர்வு அளிக்க வேண்டும்,”
இக்கூட்டத்தில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ரவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. பண்டரிநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் திரு. அசோக்குமார், உட்பட பல அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)