தருமபுரி – டிசம்பர் 08
பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட (NSS) அலகின் ஆறாம் நாள் நிகழ்வாக, பழைய தருமபுரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் “பள்ளிப் படிப்பை முடித்த பின் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” என்ற தலைப்பில் கல்வி ஆலோசனை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் தலைமை உரையை வழங்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முனைவர் காமராஜ் மற்றும் முனைவர் வித்யாசகர் கலந்துகொண்டு, உயர் கல்வித் துறையில் உள்ள வாய்ப்புகள், எந்தத் துறைக்கு எந்தத் திறமைகள் தேவையானது, கல்வி உதவித்தொகைகள், அரசு – தனியார் கல்லூரிகளில் கிடைக்கும் படிப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்கு விரிவாக விளக்கினர்.
நிகழ்வை பிரசாத், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், சிறப்பாக ஒருங்கிணைத்தார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மேலும் NSS அலகின் கல்லூரி மாணவ–மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)