தருமபுரி – டிசம்பர் 08:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த குளிக்காடு மலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகள் இல்லாததால், மக்கள் தென்னை ஓலை, தார்பாய் போன்றவற்றால் குடிசை அமைத்து கடினமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
மின்சாரம் இல்லாமல் இருளில் வாழும் மக்கள்.
இப்பகுதிக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இருளில் வாழ்வதால் இரவு நேரங்களில் விஷப்பாம்பு உள்ளிட்ட ஜந்துக்கள் தாக்கும் அச்சத்துடன் மக்கள் அஞ்சி வாழ்ந்து வருகின்றனர்.
சாலை வசதி இன்றி மருத்துவ உதவிக்கே செல்ல முடியாத நிலை.
அவசரநிலைகளில் மருத்துவமனைக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், உயிர்க்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை.
குடிநீர் குழாய் சாக்கடையில்! – மாசடைந்த நீரைப் பருகும் மக்கள்.
“ஓட்டுக்காக வந்த அரசியல்வாதிகள் பின்னர் காணமே இல்லை” – மக்களின் புகார்.
இப்பகுதி மக்கள் சாலை, குடிநீர், வீடு, மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் வழங்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் எந்தத் திட்டங்களும் எங்கள் கிராமத்தை வந்தடைவதில்லை என்றும், “ஓட்டு கேட்க மட்டுமே அரசியல்வாதிகள் வருகிறார்கள்; அதன் பிறகு எங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை” என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இப்பகுதியின் குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வாதார வசதிகளை உடனடியாக ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)