தருமபுரி – டிசம்பர் 07:
சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழு சார்பில் மாநிலம் முழுவதும் தன்னலமின்றி மனிதநேயம் காக்கும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் ‘சேவை செம்மல் விருது 2025’ வழங்கும் நிகழ்ச்சி, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) ஜெகநாதன் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில், கடந்த 13 ஆண்டுகளாக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மனிதநேய பணிகளில் ஈடுபட்டு வரும் ‘மை தருமபுரி’ அமைப்பு இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த அமைப்பு தினந்தோறும் அன்னதானம் சேவை, ஆதரவற்றோரின் பிண உடல் நல்லடக்கம், இரத்த தானம், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான கூந்தல் தானம் விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளிகள் சேவை, சுற்றுச்சூழல் பணிகள், இயற்கை தேசம், பேரிடர் கால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சமூக நலப்பணிகளை செய்து வருகிறது.
தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழு நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணன் மற்றும் குழுவினருக்கு மை தருமபுரி அமைப்பினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)