பென்னாகரம் – டிசம்பர் 08:
பென்னாகரம் அருகே நாகனம்பட்டி பகுதியில் பக்தர்களால் அமைக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வன ஐயப்பன் கோயிலின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வேத மந்திர ஓசையுடன் சிறப்பாக நடைபெற்றது. வட்டுவன அள்ளி ஊராட்சியில் உள்ள நாகனம்பட்டியின் பக்தர்கள் இணைந்து இந்த கோயிலை அமைத்துள்ளனர். குடமுழுக்கு விழா கடந்த மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
காப்புக் கட்டுதல்
-
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீ வன ஐயப்பன் பரிவார தேவதைகளுக்கான கறிக்கோலம்
-
தீர்த்தகுடம், பால்குடம், முளைப்பாரி அழைத்தல்
-
ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம்
-
ஸ்ரீ நவகிரக ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், சர்வதேவதா ஹோமம், சாந்தி ஹோமம்
-
கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை
-
வாஸ்து பூஜை, கிராமசாந்தி, பிரவேச பலி பூஜை, பூர்ணாஹூதி
இவ்வனைத்துப் பணிகளும் பக்தர் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றன.
கடந்த வெள்ளிக்கிழமை, கோபுரக் கலசங்களுக்கும், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வன ஐயப்பன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் யந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்ட பந்தனம் நடைபெற்றது. சனிக்கிழமை யாகசாலை பிரவேசம், சோம கும்ப பூஜை, ரக்ஷாபந்தன், பூதசுத்தி, மூலவர் கலாஷ்கர்சனம், ஆலய வலம் வருதல், முதற்கால யாக பூஜை, மகா தீபாராதனை இடம்பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை, கோயிலின் மூலவர்களான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ வன ஐயப்பன் மூலவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, வேத மந்திரங்களுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பென்னாகரம், பவளந்தூர், தாசம்பட்டி, பி.கோடுபட்டி, நாகனம்பட்டி, எழுமல் மந்தை, பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தவாரி கண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளில் ஊர் கவுண்டர் முருகன், கோவிந்தன், மாதையன், சத்யராஜ், குட்டி, அழகேசன், காசி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் மாதம்மாள், கோவிந்தசாமி, முருகன், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் மற்றும் பலர் இணைந்து பணியாற்றினர். ஐயப்ப பக்தர்கள், ஊர் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)