தருமபுரி – டிசம்பர் 08
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து பயன்படுத்தப்பட்டு வந்த வருவாய்துறை முக்கிய பிரமுகர் வாகனமான TN 12 Q 7777 தற்போது கழிவு செய்யப்பட்டு (Scrapped Vehicle) ஏலத்துக்கு விடப்பட உள்ளது. இந்த கழிவு செய்யப்பட்ட வாகனத்திற்கான ஆரம்ப ஏலத் தொகை ரூ.44,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனத்தின் ஏலம் 17.12.2025 அன்று முற்பகல் 10:00 மணிக்கு, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முல்லை கூட்டரங்கில் (அறை எண் 208) நடைபெறும். ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோர் நேரில் வந்து விலைப்புள்ளி முன்வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)