Type Here to Get Search Results !

பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கான தேசிய அளவிலான இரு நாள் பயிற்சி பட்டறை நிறைவு.


தருமபுரி, டிச. 25:

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகம் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உள் தர உத்தரவாத மையம் (IQAC) சார்பில், முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கான தேசிய அளவிலான இரு நாள் பயிற்சி பட்டறை சிறப்பாக நடைபெற்றது.


தரமான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் முறை மற்றும் காப்புரிமை – பேட்டண்ட் பதிவு செய்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில், ஆராய்ச்சி தர மேம்பாடு, சர்வதேச ஆய்விதழ்கள், காப்புரிமை மற்றும் பேட்டண்ட் தொடர்பான நவீன நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.


முதல் நாள் நிகழ்விற்கு, ஆராய்ச்சி மைய இயக்குநர் (பொ) பேராசிரியர் முனைவர் செல்வபாண்டியன் தலைமை தாங்கி உரையாற்றினார். முன்னதாக, உள் தர உத்தரவாத மைய ஒருங்கிணைப்பாளரும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை நிகழ்த்தி, பயிற்சி பட்டறையின் நோக்கம் மற்றும் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.


தொடர்ந்து, சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை புலமுதன்மையர் பேராசிரியர் குணசேகரன் “தரமான ஆராய்ச்சி இதழ்களை அடையாளம் காணும் முறைகள்” என்ற தலைப்பில் முதல் அமர்வில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, மும்பையைச் சேர்ந்த எல்டியான் நிறுவனம் கல்விசார் துறை முதன்மையர் முனைவர் ஜனனி பேட்டண்ட் பதிவு செய்யும் நடைமுறைகள் குறித்து விளக்கமான உரையாற்றினார்.


இரண்டாம் நாள் பயிற்சி அமர்வில், டெல்லி உயர்நீதிமன்ற வழக்குரைஞர் முனைவர் வெங்கடேசன் காப்புரிமை பதிவு செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நான்காவது அமர்வில், சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் ஹரிஹரசுதன் சர்வதேச தரமுடைய ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிடுவதற்கான முறைகள் மற்றும் கட்டணமின்றி (Free Publication) தரமான இதழ்களில் வெளியிடுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.


பயிற்சி பட்டறையின் நிறைவு விழாவில், ஊத்தங்கரை யூனிக் கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் அருள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழக புலமுதன்மையர் பேராசிரியர் ஜெயராமன் நிறைவு விழா உரையாற்றினார்.
முன்னதாக, முனைவர் கிருத்திகா வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக முனைவர் சஞ்சய் காந்தி நன்றியுரை வழங்கினார்.


இந்த தேசிய அளவிலான பயிற்சி பட்டறையில், பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தையும், பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளையும் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை உள் தர உத்தரவாத மைய உறுப்பினர்களான முனைவர் காமராஜ், முனைவர் முகுந்தன், முனைவர் அனிதா, முனைவர் பிரபா மற்றும் முனைவர் சுரேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜெய் ஸ்ரீ மற்றும் முதலாம் ஆண்டு மாணவி கிருத்திகா தொகுத்து வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies