ஏரியூர், டிச.25:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தருமபுரி மாவட்டம் ஏரியூர் பஸ் ஸ்டாண்டில், துப்புரவு பணியாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் ஏழை எளிய பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தடகம் சுப்பிரமணி இன்பசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலருமான சென்னையன் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும், முன்னாள் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.

.jpg)