பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) இணைந்து நடத்திய நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்கவிழா பழைய தருமபுரி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இன்று நடைபெற்றது. இந்த முகாம் “Youth for My Bharat” எனும் தலைப்பில் ஏற்பாடுசெய்யப்பட்டது.
விழா நிகழ்வுகள்
துவக்க நிகழ்வில் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து முனைவர் சபரி செல்வராஜ் மற்றும் முனைவர் செங்கோட்டுவேலன் ஆகியோர் பாதுகாப்பான கணினி மற்றும் கைப்பேசி பயன்பாடு குறித்து பயனுள்ள கருத்துரைகளை வழங்கினர்.
இலவச மருத்துவ முகாம்
ONE HEALTH Hospital, தருமபுரி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த மருத்துவ முகாமில் பரிசோதனை மேற்கொண்டனர்.
மாணவர்கள் உற்சாக பங்கேற்பு
NSS துறையின் மாணவ–மாணவிகள் பெருமளவில் முகாமில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் பிரசாத், முனைவர் ரேவதி, முனைவர் வித்யாசாகர் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.

.jpg)