முதல்வரின் சமூகநலத் திட்டங்கள் – மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இதுகுறித்து வெளியிட்ட தகவலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்து சமூகத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழை–எளியோர், மகளிர், மாணவர்கள், தொழில்முனைவோர், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பு மக்களுக்கு பயனளிக்கும் வகையில்
-
மக்களைத்தேடி மருத்துவ சேவை
-
விடியல் பயணம்
-
புதுமைப்பெண் திட்டம்
-
தமிழ்ப் புதல்வன்
-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
-
நான் முதல்வன்
-
இன்னுயிர் காப்போம் திட்டம்உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என கூறினார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – தமிழ்நாட்டின் மிகப்பெரிய நேரடித் தொகை வழங்கும் திட்டம்
பெண்களின் உழைப்பிற்கான அங்கீகாரமாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலும், 15.09.2023 அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் அவர்களால் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தின் கீழ்:
-
ஆரம்பத்தில் 1 கோடி 6 லட்சம் 50 ஆயிரம் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.
-
பின்னர் புதிதாக கண்டறியப்பட்ட 7.35 லட்சம் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர்.
இவ்வாறு மொத்தம் 1 கோடி 13 லட்சம் 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு இத்திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் வழங்கப்பட்ட நிதி
தருமபுரி மாவட்டத்தில்:
-
2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர்
-
இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ. 738.63 கோடி
என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

.jpg)