பாலக்கோடு அருகே உள்ள அமானி மல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உணவுத் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகளைத் தயாரித்து, இயற்கை உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவர்கள் தயாரித்த உணவுகளில் கேழ்வரகு, பனிவரகு, திணை, சாமை, வரகு, கம்பு, சோளம் உள்ளிட்ட ஆரோக்கிய சிறுதானியங்கள் இடம்பெற்றிருந்தன.
முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா அவர்கள் பங்கேற்று, மாணவர்களின் உருவாக்கமும், இயற்கை உணவு சார்ந்த விழிப்புணர்வும் பாராட்டத்தக்கது என்றும் கூறி,
அவர்களின் முயற்சிகளை ஊக்கப்படுத்தினார்.
பள்ளி வசதிகள் ஆய்வு
தொடர்ந்து, பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி மணி, மாணவர்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம், சத்துணவு வழங்கல், சுகாதார மேலாண்மை ஆகியவை அனைத்தையும் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்து, பள்ளியின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டினார்.
பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு
நிகழ்வில் தலைமையாசிரியர் ராஜா, உதவி ஆசிரியர்கள் கோகிலா, சிலம்பரசன், செல்வி, ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

.jpg)