Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விசிகவினர் தடுத்து நிறுத்தம்; பாஜகவினர் சாலை மறியல்.


பென்னாகரம் – டிசம்பர் 06:

அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற மாலை அணிவிப்பு நிகழ்வில் ஏற்பட்ட தடை காரணமாக பென்னாகரம் பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக நிர்வாகிகளை, விசிக (விடுதலை சிறுத்தைகள் கட்சி) நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர்.


விசிக நிர்வாகிகள், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் அம்பேத்கரின் அரசியலமைப்பை பாதிக்கின்றன” என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் இரு தரப்பினரும் நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகி, அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தது.


இதனை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது ஆட்சேபனையை வெளிப்படுத்தினர். சம்பவத்தை அடுத்து பென்னாகரம் டிஎஸ்பி தலைமையில் போலீசார் தலையீடு செய்தனர். தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சமாதானப்படுத்தினர்.


பின்னர், “வந்தே மாதரம்”, “ஜெய் ஸ்ரீ ராம்”, “பாரத் மாதா கி ஜே” போன்ற முழக்கங்களை தவிர்த்து, அமைதியான முறையில் மாலை அணிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் பாஜக மற்றும் விசிக நிர்வாகிகள் இருவரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு செய்தனர். இந்த சம்பவம் பென்னாகரம் பகுதியில் சில நேரம் பரபரப்பை ஏற்படுத்தியதால், பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies