சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 70-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட அதிமுகவினர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தருமபுரி அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையேற்றார்.
பின்னர் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் தருமபுரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவரணி செயலாளர் அசோகன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட மற்றும் நகர அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்று அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தருமபுரி முழுவதும் அதிமுகவினர் அம்பேத்கரின் சமூக நீதி மற்றும் சமத்துவப் போராட்டங்களை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)