பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரத்த தானம் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் செயல்படும் WhatsApp நண்பர்கள் குழு மூலம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரத்தம் தேவைப்படும் உடன் தகவல் கிடைத்தவுடன் ரத்த தானம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், விபத்தில் காயம் அடைந்தோர் உள்ளிட்டோர் மருத்துவ ரீதியாக ரத்தம் தேவைப்படும் சூழ்நிலையில், தாவெகா நண்பர்கள் குழு உடனடியாக முன்வந்து உதவி செய்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 60 நபர்களுக்கு ரத்தம் வழங்கப்பட்டதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த மனிதநேயச் சேவைக்கு பாப்பாரப்பட்டி பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

.jpg)